Load Image
dinamalar telegram
Advertisement

விழக் காத்திருக்குது டிரான்ஸ்பார்மர்...விபரீதம் அருகில்!



குவிந்த குப்பை


திருப்பூர், 11வது வார்டு, திலகர் நகர், துளிர் நர்சரி பள்ளி வீதியில் ரோட்டோரத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை அள்ளிச்செல்ல வேண்டும்.- தெய்வராஜ்,திலகர் நகர்.

பல்லாங்குழி சாலை
திருப்பூர், காலேஜ் ரோடு, அணைப்பாளையத்தில் இருந்து சிக்கண்ணா கல்லுாரி வரை ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுவதால், 'பேட்ஜ்ஒர்க்' மேற்கொள்ள வேண்டும்.- நாகராஜன், கொங்கணகிரி.

எப்போது விழுமோ!
திருப்பூர், 25வது வார்டு, ராமமூர்த்தி நகர் மெயின் ரோட்டில் டிரான்ஸ்பார்மர் விழும் நிலையில் உள்ளது. கம்பத்தில் கம்பி வெளியே தெரிகிறது. விபத்து ஏற்படும் முன், சீரமைக்க வேண்டும்.- பாலாஜி தங்கவேல், ராமமூர்த்தி நகர்.

அடிக்கடி விபத்து
திருப்பூர், தென்னம்பாளையம் ஸ்கூல் வீதி, மூன்று சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்க வேண்டும். டூவீலர்கள் வேகமாக வந்து திரும்புவதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.- சரவணன்,தென்னம்பாளையம்.

பணி துவங்குமா?
திருப்பூர், 24 வது வார்டு, காந்திநகர், இ.பி. காலனி ஐந்தாவது வீதியில் பாதாள சாக்கடை பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது. இன்னமும் பணி துவக்காமல் உள்ளனர்.- பத்மநாபன், இ.பி., காலனி.

கால்வாய் அடைப்பு
திருப்பூர், கருமாரம்பாளையம், சீயங்காடு, கோவிந்தசாமி லே- அவுட்டில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கியுள்ளது.- ஆஷா, சீயங்காடு.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement