வனக்கல்லூரியுடன் வனம் ஒப்பந்தம்
பல்லடம், : பல்லடம் வனம் அமைப்பு, மரக்கன்று நடுதல், பசுமையை ஏற்படுத்துவது, நிலத்தடி நீரை பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. தன்னார்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு மேற்கொண்டு, மரக்கன்றுகள் நடுவதை வனம் அமைப்பு செயல்படுத்தி வருகிறது.அவ்வாறு, மேட்டுப்பாளையம் வன கல்லுாரியுடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
அதன் அடிப்படையில், ஒரு லட்சம் நாற்றுகளை தயார் செய்து கல்லுாரியில் பெறுவதற்கான விழா நடந்தது.ஒப்பந்தத்தின்படி, கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, கல்லுாரி முனைவர் பார்த்திபன் ஆகியோரிடம், 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, வனம் அமைப்பின் செயல் தலைவர் பாலசுப்பிரமணியம் வழங்கினார். பொருளாளர் விஸ்வநாதன், நிர்வாகி பன்னீர் செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!