ADVERTISEMENT
திருப்பூர், : சென்னையில் நேற்று அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டம் நடத்த அனுமதித்த கோர்ட், பொதுக்குழுவில் முன்னதாகவே முடிவு செய்யப்பட்ட தீர்மானங்கள் தவிர வேறு புதிய தீர்மானங்கள் எதுவும் கொண்டு வரக்கூடாது என நிபந்தனை விதித்தது.
இந்நிலையில், தீர்மானங்கள் அனைத்தையும் நிராகரிப்பதாகவும், அடுத்த மாதம் மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடத்தவும் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. இதில், கட்சியின் ஒற்றைத்தலைமை குறித்த தீர்மானம் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.திருப்பூர் மாநகர் மாவட்டம் மற்றும் புறநகர் மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலரும், பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சென்றனர். நேற்று முன்தினம் இரவே இதில் பெரும்பாலான நிர்வாகிகள் பழனிசாமியை சென்று சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ''இன்று (நேற்று) நடந்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை குறித்த முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்த்தோம்.
ஆனால், கோர்ட் உத்தரவால் நடைபெறவில்லை. இருப்பினும் அடுத்த பொதுக்குழுவில் பிரதான தீர்மானமாக இது கொண்டு வரப்படும்.பழனிசாமி தான் அந்த ஒற்றை தலைமையாக இருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. திருப்பூரை பொறுத்தவரை நிர்வாகிகள் மத்தியில், அவர்தான் தலைமையேற்க வேண்டும் என்ற முடிவில் உள்ளோம். மாநிலம் முழுவதுமே பெரும்பாலான நிர்வாகிகள் நிலைப்பாடு பழனிசாமிக்கு ஆதரவாகவே உள்ளது'' என்றனர்.பழனிசாமியை தலைமையேற்க வருமாறு, திருப்பூரில் பல்வேறு போஸ்டர்களை பழனிசாமி ஆதரவாளர்கள் ஒட்டியிருந்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!