கடையடைப்பு போராட்டம் விவசாயிகள் சங்கம் அழைப்பு
பல்லடம், : கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் அறிக்கை:பி.ஏ.பி., பாசன விவசாயிகள், ஏற்கனவே தண்ணீர் இல்லாமல் பற்றாக்குறையில் தவித்து வருகின்றனர். அணையில் தண்ணீர் இருக்கும்போதே, தண்ணீர் இல்லை என்று கூறி அதிகாரிகள் பாசனத்துக்கான தண்ணீரை நிறுத்துகின்றனர்.இச்சூழலில், திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்துக்கு எவ்வாறு தண்ணீர் வினியோகிக்க முடியும்?
அவ்வாறு வினியோகித்தால், பி.ஏ.பி., திட்டம் வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே இருக்கும். எனவே, பி.ஏ.பி., பாசன விவசாயிகளை பாதிக்கும் இத்திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். இதை தண்டித்து, வரும் 27ம் தேதி அன்று பொள்ளாச்சி, உடுமலையில் நடக்கவுள்ள ஆர்ப்பாட்டம், மற்றும் கடையடைப்பு போராட்டத்துக்கு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் முழு ஆதரவு அளிக்கும்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!