பஸ்சில் நகை, பணம் மாயம்
அவிநாசி : கோவை, கணபதியை சேர்ந்தவர் சரவணன்; இவரது மனைவி புவனேஸ்வரி, 35; கடந்த 18 ம் தேதி, தன் தாய் வீட்டில் நடைபெறும் விசேஷத்துக்காக கோவை காந்திபுரத்தில் இருந்து சேலம் செல்லும் பஸ்சில், பவானிக்குப் புறப்பட்டார்.கருமத்தம்பட்டியில் ஏறிய மூன்று பெண்கள், புவனேஸ்வரி அருகில் நின்றுள்ளனர்; அதில் ஒருவர் குழந்தையுடன் இருந்தததால் எழுந்து நின்று இடமளித்துள்ளார். மாலையில் தன் தாய் வீட்டிற்கு சென்ற பிறகு தனது பையில் 15 சவரன் நகைகள், 50 ஆயிரம் ரூபாய் நகைகள் வைத்திருந்த மணி பர்ஸ் மாயமாகியிருந்தது தெரியவந்தது.அவிநாசி போலீசில், புகார் மனுவை அளித்துள்ளார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!