Load Image
dinamalar telegram
Advertisement

ஆதரவு திரட்ட அடுத்த மாதம் சென்னை வருகிறார் திரவுபதி முர்மு

Tamil News
ADVERTISEMENT
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாட்பாளர் திரவுபதி முர்மு ஜூலை முதல் வாரத்தில் சென்னை வருகிறார்.

வரும் ஜூலை 18-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்புமனு தாக்கல் ஜூன் 15-ல் துவங்கியது; ஜூன் 29 கடைசி நாள். ஆளும் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஒடிசா மாநிலத்தின் பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு நிறுத்தப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கம்யூனிஸ்ட் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் 27-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார். திரவுபதி முர்மு இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் தலைமையில் மத்திய அமைச்சர்கள் பா.ஜ. தேசிய நிர்வாகிகளை கொண்ட 14 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசனும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளார்.
Latest Tamil News இன்று வேட்புமனு தாக்கல் செய்ததும் பிரதமர் நரேந்திர மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசியத் தலைவர் நட்டா தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் நிதின் கட்கரி உள்ளிட்டோரை நேரில் சந்தித்து தன்னை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்ததற்காக திரவுபதி முர்மு நன்றி தெரிவிக்கிறார்.

அதைத் தொடர்ந்து நாடு முழுதும் சுற்றுப்பயணம் செய்யும் அவர் பா.ஜ. கூட்டணி கட்சித் தலைவர்கள் பா.ஜ. மாநிலத் தலைவர்கள் தன்னை ஆதரிக்கும் பிற கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோரையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்ட இருக்கிறார்.

இந்த பயணத்தின்போது பா.ஜ. மாநில தலைமை அலுவலகங்களில் எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கும் கூட்டங்களிலும் பேசுகிறார்.ஜூலை முதல் வாரத்தில் சென்னை வரும் திரவுபதி முர்மு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆகியோரை சந்திக்க இருப்பதாக பா.ஜ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த பயணத்தின்போது சென்னையில் உள்ள பா.ஜ. தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு செல்கிறார். அ.தி.மு.க. - பா.ஜ. - பா.ம.க. - எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் திரவுபதி முர்மு பங்கேற்று பிரசாரம் செய்ய இருக்கிறார்.இதற்கான ஏற்பாடுகளை தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை ஜனாதிபதி தேர்தல் மேலாண்மை குழு உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் செய்துவருகின்றனர்.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (9)

 • sankar - சென்னை,இந்தியா

  அதிர்ஷ்டம் இப்படித்தான் கூரையைப்பிச்சிக்கொண்டு கொட்டுமாம். சு,.சாமி, நம்ம துக்ளக் ஆடிட்டர்-ரெண்டு பேர்ல ஒருத்தரை ஜனாதிபாதியாக்குவாங்கன்னு ரொம்ப எதிர்ப்பார்த்தேனுங்க. ஏமாத்திப்பூட்டிங்களே மோடி அய்யா.

 • Barakat Ali - Medan,இந்தோனேசியா

  சந்தித்த முதியவரிடம் "கவுடாவா?" என்று கேட்டவர் உங்களை அமரவைத்து உபசரிப்பாரா ????

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  இவரின் சென்னை விஜயத்தின்போது, தமிழக முதல்வர், பணிநிமித்தமாக வெளி ஊர் சென்றுவிடுவார். வாய்ப்புக்கள் அதிகம். மற்ற அல்லக்கைகள் எதுவும் பார்க்க வராது. ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலை கண்டிப்பாக இவரை சந்திப்பார் என நம்புகிறேன்.

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  முர்மு அவர்களின் சென்னை விஜயத்தின்போது, பார்க்கலாம், எத்தனை சமத்துவம் பேசும் அல்லக்கைகள் இவரை பார்க்க வருகின்றனர், இவருக்கு ஆதரவு தருவார்கள் என்று? நான் கூறிய அல்லக்கைகள் - திருமாவளவன், சீமான், மற்றும் பல திக அண்ட் திமுகவினர்.

 • நல்லவன் - chennai,இந்தியா

  எங்க ஊர்லேயும் நிறைய கோவில்கள் இருக்கு, அங்கே குப்பைகள் கூட இருக்கு - முதலில் உங்களின் பணியை சுத்தமாக முடிகள் - ஆதரவு வேண்டுமென்றால்..

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்