ஏ.பி.எஸ்., அகாடமி பள்ளி மாணவர்கள் அசத்தல் சாதனை
திருப்பூர் : திருப்பூர் பூலுவப்பட்டியில் உள்ள ஏ.பி.எஸ்., அகாடமி மெட்ரிக் பள்ளியில் பத்து மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் நுாறு சதவீத தேர்ச்சியுடன் முதல் வகுப்பில் வெற்றி அடைந்துள்ளனர்.பிளஸ் 2 மாணவியர் அபிநயா, பாரதி இருவரும், தலா 586 மதிப்பெண்களுடன் முதலிடம்; 585 மதிப்பெண் பெற்று நளினி இரண்டாமிடம்; 581 மதிப்பெண் பெற்று பேச்சி காயத்ரி மூன்றாமிடம் பிடித்துள்ளனர்.கணினி பயன்பாட்டில் மூவரும், கணினி அறிவியல் - 2, கணக்குப்பதிவியல் - 2, உயிரியல், வணிகவியல், பொருளியலில் தலா ஒருவர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பில், 486 மதிப்பெண் பெற்று அனிஷ் முதலிடம், ஸ்ரீ சஷ்டிகாந்த்த் - 478 இரண்டாமிடம், சண்முகப்பிரியா, ஜீவபிரசாத் - 473 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளனர். தேர்வில் சாதித்த மாணவர்களை பள்ளி தாளாளர் சரவணக்குமார் பாராட்டினார்.பத்தாம் வகுப்பில் 485க்கு மேல் மதிப்பெண் பெற்றால், நுாறு சதவீதம், 480 -- 485 மதிப்பெண் பெற்றால், 75 சதவீதம், 475 - 480 பெற்றவர்களுக்கு, 50 சதவீதம் கல்வி கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு 95006 67222, 95006 67333, 95006 66444 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என பள்ளி நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!