Load Image
dinamalar telegram
Advertisement

போலீஸ் ஸ்டேஷன் அருகே காயங்களுடன் வாலிபர்


திருப்பூர் : திருப்பூர் - தாராபுரம் ரோட்டில், தெற்கு போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. நேற்று பகல் 12:00 மணியளவில் போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகேயுள்ள தெரு முனையில் உடலில் ரத்த காயங்களுடன் ஒரு நபர் வந்தார். அவரால் ஒழுங்காக நடந்து கூடச் செல்ல முடியாமல் ரோட்டோரம் விழுந்தார்.

அங்கிருந்த போலீசார் ஓடி வந்து அவரிடம் விவரம் கேட்டபோது, உளறினார். இதையடுத்து போலீசார் அந்நபரை ஒரு ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் கூறுகையில், 'அந்த நபர் குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. போதையில் இருந்தாரா, அவரே எங்காவது விழுந்து காயமேற்பட்டதா, யாரேனும் அவருடன் தகராறு செய்து கைகலப்பில் காயம் ஏற்பட்டதா எனத் தெரியவில்லை,' என்றனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement