Load Image
dinamalar telegram
Advertisement

வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ்

Tamil News
ADVERTISEMENT
சென்னை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 27ம் தேதி வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் நடத்த இருந்த வேலை நிறுத்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை வேண்டும்; பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பன உட்பட ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 27ல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்தது. இதுகுறித்து இந்திய வங்கிகளின் கூட்டமைப்புக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதையடுத்து மத்திய தொழிலாளர் நல கமிஷனர் மற்றும் இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு அதிகாரிகளுடன் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பிரநிதிகள் சந்தித்து பேச்சு நடத்தினர்.டில்லியில் நேற்று நடந்த பேச்சில் கூட்டமைப்புகளின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இதற்கான பேச்சு ஜூலை 1ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.இதன் காரணமாக ஜூன் 27ம் தேதி நடைபெற இருந்த வேலை நிறுத்தத்தை கைவிடுவதாக வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (4)

  • Girija - Chennai,இந்தியா

    நாட்டில் பென்சன், இலவசங்களை தடை செய்தால் ஒவ்வொரு மூத்த குடிமகனும் ஆஸ்திலியா போல் அரசு உதவி தொகை, இலவச மருத்துவம் பெறலாம் .

  • R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா

    ஏமாற்றுப் பேர்வழிகளுக்கெல்லாம் ஆயிரக்கணக்கான கோடிகள் கடன் தந்து அவர்களிடமிருந்து வெகுமதிகள் வாங்கி சுகபோக வாழ்க்கை வாழும் இவர்கள் வாரத்தில் பாதி நாட்கள் மட்டுமே வேலை செய்வோம் என்றும் பிற்காலத்தில் கூறுவர்.அரசாங்கத்தை நடத்துபவர்கள் அவர்களது கோரிக்கையை ஏற்பர்.ஏனெனில் வாங்கி ஊழியர்கள் தயவு அவர்களுக்கு தேவை.

  • chennai sivakumar - chennai,இந்தியா

    As it is banks are working from 10 to 4 minus half an hour lunch. Which means effectively 5 .5 hours a day and every 2 and 4 th Saturday holiday. With the computerisation and ATMs, passbook printing machines clerical work load has considerably reduced. Many staffs are engaged in mobile during working hours. Salaries are also good. Most of the branches are air conditioned. What more they expect ?? The idea of 2 and 4 th h Saturday holiday in my opinion to be exted to state as well as central govt organisations. We have so much of work and there is no point in multiplying staff like rabbits

  • Visu - chennai,இந்தியா

    இவங்களுக்கு சம்பளம் ரொம்ப ஜாஸ்தி 25% குறைத்தால் நல்லது

Advertisement