Load Image
dinamalar telegram
Advertisement

காந்தி வித்யாலயா பள்ளி மாணவர்கள் அசத்தல்


திருப்பூர் : திருப்பூர், பல்லடம் ரோடு, வித்யாலயம், பாரதி நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு சர்வோதய சங்கத்தின் காந்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, பிளஸ் 2 தேர்வில், நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. பள்ளி மாணவி அனுபிரபா, 595 மதிப்பெண் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றதோடு, பொருளாதாரம், வணிகவியல், வணிக கணிதம் ஆகிய பாடங்களில், சதமடித்துள்ளார்.மாணவி ஸ்ரீநிதி, 590 மதிப்பெண் பெற்று, பொருளாதாரம், வணிகவியல், கணக்கு பதிவியல் ஆகியவற்றில், 100க்கு 100 பெற்றுள்ளார்.


பிரேம் - 588, ஜமுனாஸ்ரீ - 584, ஜீவிதா - 578 மதிப்பெண் பெற்று அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.பத்தாம் வகுப்பு பொது தேர்விலும், இப்பள்ளி, 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. கமலேஸ்வரி, 478 மதிப்பெண் பெற்று முதலிடம், தீக் ஷிகா - 474, கிருபாஸ்ரீ - 473 மதிப்பெண் பெற்று அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.பள்ளியில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடந்து வருவதாகவும், சாதனை புரிந்த மற்றும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி தாளாளர் செந்தில்நாதன், பள்ளி முதல்வர் முத்துகண்மணி உட்பட பலர் பாராட்டினர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement