ADVERTISEMENT
ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் அருகே, துளசாபுரம் கிராமத்தில் 22 சுவாமி சிலைகளை உடைத்த நபரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், சுங்குவார்சத்திரம் அருகே துளசாபுரம் ஊராட்சியில், கற்பக விநாயகர், லட்சுமி அம்மன் கோவில்கள் உள்ளன.இரு கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 22 சுவாமி சிலைகள், இம்மாதம் 20ம் தேதி இரவு உடைக்கப்பட்டு, சாலையில் வீசப்பட்டிருந்தன.சுவாமி சிலைகளை உடைத்தோரை கைது செய்ய கோரி, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சுங்குவார்சத்திரம் போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.இதில், சுவாமி சிலைகளை உடைத்தது, துளசாபுரம் அடுத்த இடையார்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சதிஷ் பிரேம்குமார் என்ற துளசி, 40, என்பது தெரிய வந்தது.'குடி' போதையில் இருந்த துளசி, மழையின்போது கோவில் அருகே ஒதுங்கியுள்ளார். கடவுள் மீது நம்பிகை இல்லாததால், சிலைகளை உடைத்ததாக அவர், போலீசாரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், துளசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் வேறு யாரேனுக்கும் தொடர்பு உள்ளதா எனவும் விசாரித்து வருகின்றனர்.

பாவம் குடி போதையில் செய்த தவறுக்கு நல்ல நிலைமையில் இருக்கும் போது தண்டனை தரக்கூடாது.இவன் குடித்து விட்டு இந்த வேலையை செய்வதாக சொல்கிறான். ஆதலால் இவனை மீண்டும் குடிக்க வைத்து குடி போதையில் இருக்கும் போது விசாரித்து குடி போதையில் இருக்கும் போது தண்டனை தர வேண்டும்.