சப் இன்ஸ்பெக்டர்இல்லாமல் மக்கள் அவதி
சங்கராபுரம் : சங்கராபுரம் காவல் நிலையத்தில் 2 மாதமாக சட்டம் ஒழுங்கு சப் இன்ஸ்பெக்டர் இல்லாததால் பொது மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய திருமால் எலவனாசூர்கோட்டைக்கு கடந்த மே மாதம் முதல் வாரம் மாறுதலாகி சென்றார். அவருக்கு பதில் புதிதாக பொறுப்பேற்ற சப் இன்ஸ்பெக்டர் இன்ஸ்பெக்டர் பதிவி உயர்வு பெற்று பயிற்சிக்காக சென்றுவிட்டார்.
கடந்த 2 மாதங்களாக சங்ககராபுரம் ஸ்டேஷனில் சட்டம் ஒழுங்கு சப் இன்ஸ்பெக்டர் இல்லாததால் பொது மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சங்ககராபுரம் ஸ்டேஷனில் சட்டம் ஒழுங்கு சப் இன்ஸ்பெக்டர் நியமிக்க மாவட்ட எஸ்.பி., நடவடிக்கை எடுக்கக வேண்டும்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!