நியூ பவர் பள்ளி சாதனை: மாணவர்களுக்கு பாராட்டு
சங்ககராபுரம், : சங்கராபுரம் நியூ பவர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் சாதனை மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நியூ பவர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 12 ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 168 மாணவர்களும்,10 ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 180 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இப் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றது.
பிளஸ்2 தேர்வில் மாணவி அபிநயா 591, நேதாஜி 590, நவினா, பவித்ரா 587 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர். 10ம் வகுப்பு பொது தேர்வில் அஜய் அதித்யன் 497, யோக வர்ஷிணி, காவியா487, மோனிஷா, நிவேதா 485 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர்.சாதனை படைத்த மாணவ மாணவிகளை பள்ளி தாளாளர் துரை தாகப்பிள்ளை,சேர்மன் மணிவண்ணன்,பொருளாளர் ரோஜா ரமணி,தலைவர் பழனியம்மாள்,நிறுவனர் பெரியசாமி மற்றும் பள்ளி முதல்வர், மற்றும் ஆசிரியர்கள் பராட்டி பரிசளித்தனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!