Load Image
dinamalar telegram
Advertisement

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சங்கராபுரம், : சங்கராபுரத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாதத்தை பணிகாலமாக அறிவிக்க வேண்டும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலை படி உயர்வினை தமிழக அரசு வழங்க வேண்டும். காலியாக உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அனந்த கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.வட்ட தலைவர் காஞ்சனா மேரி வரவேற்றார்.மாநில செயலாளர் அம்சராஜ்,மாவட்ட செயலாளர் மகாலிங்கம்,மாவட்ட பொருளாளர் ரவி,ஊரக வளர்சி துறை அலுவலர் சங்க பொருளாளர் ரங்கநாதன் ஆகியோர் பேசினர்.முடிவில் வட்ட பொருளாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement