சங்கராபுரம் செயின்ட் ஜோசப் பள்ளி 10 வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை
சங்கராபுரம், : சங்கராபுரம் செயின் ஜொசப் மெட்ரிக் மேல்நிலை பள்ளி 10 மற்றும் 12 ம் வகுப்பில் மாவட்ட மற்றும் மாநில அளவில் சாதனை படைத்துள்ளது.இப் பள்ளியில் 10 ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 252 மாணவர்களும், பிளஸ் 2 தேர்வு எழுதிய 242 மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவி ெஷரின் வினிஷா 594 மதிப்பெண் பெற்று மாநில மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றார்.
மாணவி பிரவிணா 591, சானியா பானு 582, மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றனர்.10ம் வகுப்பு பொது தேர்வில் மாணவி காயத்ரி 494 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றார்.சாதனை படைத்த மாணவ மாணவிகளை பள்ளி தாளாளர் ஜோசப் சீனிவாசன்,முதல்வர் சாராள் ஜோசப் சீனிவாசன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசளித்தனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!