மாநில கோகோ போட்டி: மாணவிகளுக்கு உபகரணம்
தியாகதுருகம், : மாநில அளவில் கோ- கோ போட்டியில் பங்கேற்கும் மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி தியாகதுருகம் மவுண்ட் பார்க் பள்ளியில் நடந்தது.தமிழ்நாடு மாநில கோ- கோ கழகம் நடத்தும் 40வது ஜூனியர் பெண்கள் மாநில அளவிலான கோ -கோ போட்டி, ஒசூரில் இன்று துவங்குகிறது.
இப்போட்டியில் கலந்து கொள்ளும் கள்ளக்குறிச்சி மாவட்ட கோ -கோ பெண்கள் அணியில் அரசு பள்ளி, மவுண்ட் பார்க் மேல்நிலைப்பள்ளி, ஏ.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளிலிருந்து மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.இவர்களுக்கு மாவட்ட கோ- கோ கழகத் தலைவரும். மவுண்ட் பார்க் பள்ளி தாளாளருமான மணிமாறன், சீருடை, ஷூ உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வாழ்த்தினார். மாவட்ட செயலாளர் நடராஜன் உடனிருந்தார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!