பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
மயிலம், : மயிலம் அடுத்த தீவனுாரில் விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ம.க., மாவட்ட புதிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.மயிலம் ஒன்றியம் தீவனுாரில் நடந்த பா.ம.க., விழுப்புரம் வடக்கு மாவட்ட கூட்டத்திற்கு மயிலம் எம்.எல்.ஏ., சிவக்குமார் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.
மயிலம் ஒன்றிய பா.ம.க., செயலாளர்கள் நெடி பாண்டியன், அருள், மணி முன்னிலை வகித்தனர்.பா.ம.க., மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகம் வரவேற்றார். மாநில தலைமை நிலைய செயலாளர் இசக்கி, மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் செல்வகுமார், பசுமை தாயகம் இணைச்செயலாளர் ராதாகிருஷ்ணன், தர்மபுரி மாவட்ட அமைப்பு செயலாளர் சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!