எம்.ஆர்.கே., கல்லூரியில் யோகா விழிப்புணர்வு
சிதம்பரம் : காட்டுமன்னார்கோவிலில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லுாரி மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் சர்வதேச யோகா தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.கல்லுாரி சேர்மன் கதிவரன் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் ஆனந்தவேலு முன்னிலை வகித்தார். நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர் சித்திவிநாயகம் வரவேற்றார். சிதம்பரம் மனவளக் கலை மன்றம் சாந்தி மற்றும் குழுவினர் யோகாசன பயிற்சி அளித்தனர். தொடர்ந்து தேசிய மாணவர் படை சார்பில், சர்வதேச யோகா தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!