சிகா கல்லுாரியில் ஆண்டு விழா
விழுப்புரம் : கப்பியாம்புலியூரில் உள்ள சிகா மேலாண்மை கல்லுாரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.சிகா கல்வி அறக்கட்டளைத் தலைவர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். முதல்வர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் புவனேஸ்வரி வரவேற்றார்.
விழுப்புரம் எம்.ஜி.ஆர்., மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் கணேசன் சிறப்புரையாற்றி, போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளித்தார்.விசாலாட்சி பொன்முடி வாழ்த்துரை வழங்கினார். பின், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், தமிழார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.கணினி அறிவியல் துறை தலைவர் அருண்மொழிஅரசன் நன்றி கூறினார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!