தேசிய பேரிடர் மீட்புக் குழு மாணவர்களுக்கு பயிற்சி
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் ஞானானந்தா பள்ளி மாணவர்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் செயல் விளக்க பயிற்சி அளித்தனர்.திருக்கோவிலுார் ஸ்ரீ ஞானானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், அரக்கோணத்தை சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் 20 பேர் திருக்கோவிலுாருக்கு வந்திருந்தனர்.
மீட்புக் குழுவினர் பள்ளி மாணவர்களுக்கு பூகம்பம், புயல், வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் தற்காத்துக் கொள்வது, பாதிப்புகளில் சிக்கியவர்களை மீட்கும் நடைமுறைகள் குறித்த செயல் விளக்க பயிற்சியை தேசிய பேரிடர் மீட்புப் படையின் சார்பு ஆய்வாளர் சஞ்சீவ் தேஸ்வல் தலைமையிலான பயிற்சி அளித்தனர்.நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹேமாலதா வரவேற்றார். தாசில்தார் குமரன் முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் சிட்டிபாபு, வி.ஏ.ஓ., ரவி உள்ளிட்ட வருவாய் துறையினர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர். பள்ளி மாணவ, மாணவிகள் பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!