Load Image
dinamalar telegram
Advertisement

தீபாவளி பண்டு சீட்டு கட்டி ஏமாந்தவர்கள் முற்றுகை


கடலுார், : தீபாவளி பண்டு சீட்டு கட்டி ஏமாந்தவர்கள், பணம் கேட்டு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் திடீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. தீபாவளி பண்டு சீட்டு நடத்தி, 300க்கும் மேற்பட்டோரிடம் பணம் வசூல் செய்ததாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் ராஜா இறந்துள்ளார்.


இதனால், பணத்தை கட்டியவர்கள் அவரது மனையிடம் பணம் கேட்டபோது, எனக்கு ஒன்றும் தெரியாது என, கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர்.இந்நிலையில் நேற்று திடீர்குப்பம் ராஜா வீட்டை 30க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு, பணம் கேட்டனர். கடலுார் புதுநகர் போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். இச்சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement