Load Image
dinamalar telegram
Advertisement

நேரடி எஸ்.ஐ., பதவிக்கான எழுத்துதேர்வு: 9,278 பேர் பங்கேற்கின்றனர்

Tamil News
ADVERTISEMENT

கடலுார், : கடலுார் மாவட்டத்தில் நேரடி சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்துத் தேர்வில் 9, 278 பேர் பங்கேற்கின்றனர்.தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் 2022 ம் ஆண்டுக்கான 444 பணியிடங்களுக்கான நேரடி சப் இன்ஸ்பெக்டர் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நாளை 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடக்கிறது.


மாவட்டத்தில் கடலுார் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி, கடலுார் செயின்ட் ஜோசப் கலைக் கல்லுாரி, புதுப்பாளையம் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி, திருப்பாதிரிப்புலியூர் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி, கம்மியம்பேட்டை செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 5 மையங்களில் தேர்வு நடக்கிறது. 9,278 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வர்கள் தேர்வு மையங்களில் காலை 8.30 மணிக்குள் இருக்க வேண்டும்.தேர்வு 10.00 மணி முதல் 12.30 மணிவரை நடக்கிறது.



25ம் தேதி மதியம் தமிழ் மொழிக்கான தகுதி தேர்வு 3:30 மணி முதல் 5.10 மணி வரை நடக்கிறது. தேர்வர்கள் தேர்வு மையங்களில் மதியம் 2:00 மணிக்குள் இருக்க வேண்டும்.26ம் தேதி கடலுார் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் பள்ளியில் காலை 10:00 மணி முதல் 1:00 மணி நடக்க உள்ள துறை ரீதியான எழுத்துத்தேர்வில் 213 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வர்கள் தேர்வு மையங்களில் காலை 8.30 மணிக்குள் இருக்க வேண்டும்.தேர்வர்கள் கைப்பை, மொபைல் போன், புளு டூத் மற்றும் எலக்டரானிக்ஸ் சாதனங்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு வரக் கூடாது. முகக்கவசம் அணிய வேண்டும்.தேர்வு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் தேர்வு பணியை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என எஸ்.பி.,சக்தி கணேசன் ஆலோசனை வழங்கினார்.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement