Load Image
dinamalar telegram
Advertisement

கடன் கேட்டு சாலையோர வியாபாரிகள் தவம்பரிந்துரைக்காமல் மாநகராட்சி மவுனம்

கோவை : சாலையோர வியாபாரிகளுக்கு மத்திய அரசு அறிவித்த வங்கி கடன் கிடைக்க, பரிந்துரை கடிதம் வழங்க, கோவை மாநகராட்சி தயக்கம் காட்டுகிறது.

முழு ஊரடங்கு அமல்படுத்தியதால், சாலையோர வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, படிப்படியாக தளர்வு அறிவித்ததும், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த அவ்வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க, முதலீட்டு கடனாக, வங்கிகள் மூலம் ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. இதை, மத்திய அரசு வழிகாட்டுதல்படி, மாநகராட்சி ஒருங்கிணைத்தது.12 மாத தவணையாக, கடன் தொகையை முறையாக திருப்பிச் செலுத்திய வியாபாரிகளுக்கு, மீண்டும் ரூ.20 ஆயிரம் வழங்க, மத்திய அரசு அறிவுறுத்தியது.

அதன்படி, விண்ணப்பித்த பலருக்கும் இன்னும் கடன் தொகை கிடைக்கவில்லை. மாநகராட்சி தரப்பில் பரிந்துரை கடிதம் கொடுக்க வேண்டுமென, வங்கி நிர்வாகங்கள் கேட்கின்றன. அக்கடிதம் கொடுக்க, மாநகராட்சி தரப்பில் அதிகாரிகள் முனைப்பு காட்டாமல், கிடப்பில் போட்டுள்ளனர்.வாழ்வாதார பிரச்னை என்பதால், இவ்விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, பரிந்துரை கடிதம் வழங்க வேண்டுமென, சாலையோர வியாபாரிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement