ராணுவ வீரரிடம் திருடிய கேரள வாலிபர் சிக்கினார்
கோவை : கோவை ரயில் நிலையத்தில் ராணுவ வீரரின் பையை திருடிய, கேரள வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ், 38. ராணுவ வீரரான இவர் கடந்த மாதம் 17ம் தேதி சென்னையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ரயிலில் சென்றார். முன் பதிவு செய்யப்பட்ட ஏ.சி., பெட்டியில் பயணித்தார்.ரயில் கோவை வந்தபோது, அவரது பை திருடு போயிருந்தது. ரயில்வே போலீசில் புகார் அளித்தார். எஸ்.ஐ., முருகன் மற்றும் போலீசார் விசாரித்தனர்.'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்தபோது வாலிபர் ஒருவர், ராணுவ வீரரின் பையை திருடிச்செல்வது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர்.
நேற்று காலை, அந்த வாலிபர் கோவை ரயில் நிலையத்தில் சுற்றுவதை கண்ட போலீசார், சந்தேகத்தில் பிடித்தனர். விசாரித்தபோது, ராணுவ வீரரின் பையை திருடியதை ஒப்புக் கொண்டார்.அவர் கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த ரத்தீஷ், 38, என்பதும், கேரளாவில் வெவ்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் அவர் மீது திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். விசாரித்த மாஜிஸ்திரேட், ரத்தீஷை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!