Load Image
dinamalar telegram
Advertisement

ஆசிரியர்களுக்கு பாராட்டு


பெண்ணாடம், : பெண்ணாடம் அருகே பிளஸ் 2 பொதுத்தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதை வரவேற்று ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.பெண்ணாடம் அடுத்த பெலாந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் 2021 - 2022 கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 37 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.


அதனை வரவேற்று, முருகன்குடி செந்தமிழ் மரபுவழி வேளாண் மையம் சார்பில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் கலையழகன் தலைமை தாங்கினார். துணை தலைமை ஆசிரியர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். ஆசிரியர் உமாபதி வரவேற்றார். முருகன்குடி செந்தமிழ் மரபு வழி வேளாண் மைய நிர்வாகி முருகன் மற்றும் நிர்வாகிகள் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினர். ஆசிரியர்கள் இளங்கோவன், மரபுவழி வேளாண் மைய நிர்வாகிகள் வேல்முருகன், பிரகாஷ், மணிமாறன் மற்றும் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement