குட்டையை மீட்டுத் தாங்க: பச்சாபாளையம் மக்கள் மனு
கோவை : வேலந்தாவளம் பிரதான சாலையில் உள்ள குட்டையை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது, நடவடிக்கை எடுக்குமாறு பச்சாபாளையம் மக்கள் மனு அளித்துள்ளனர்.
பச்சாபாளையம் கிராம மக்கள், மதுக்கரை தாசில்தார் பர்சானாவிடம் அளித்துள்ள மனு:திருமலையம்பாளையம் பேரூராட்சி, சர்வே எண்: 1172, 1173 அருகிலும், நாச்சிபாளையம் - வேலந்தாவளம் பிரதான சாலையோரத்தில், ஒரு ஏக்கர் பரப்பளவில் குட்டை இருந்தது.மழைக்காலங்களில் குட்டையில் நீர் நிரம்பி, விவசாயிகளுக்கு நீராதாரமாக விளங்கியது. இக்குட்டை, 100 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இக்குட்டை தற்போது ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதால், கால்நடைகளுக்கும், விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
நீர் வரக்கூடிய குழாய் மண் போட்டு மூடப்பட்டுள்ளதால், மழைக்காலங்களில் குட்டைக்கு தண்ணீர் வருவதில்லை.எதிர்காலத்தில் குட்டை முழுவதும், மூடப்படும் அபாயம் உள்ளது. விவசாய பூமிகளுக்கு நிலத்தடி நீர் மட்டமும் கேள்விக்குறியாகி உள்ளது.எனவே, குட்டையை பலப்படுத்தி, இரு குட்டைகளுக்கு நடுவில் உள்ள தேவையில்லாத சாலையை அகற்றி, ஒரே குட்டையாக மாற்ற வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!