சிறுவாணியில் 12 மி.மீ., மழைநீர் மட்டம் உயர வாய்ப்பு
கோவை : தமிழக அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக, சில நாட்களாக, சிறுவாணி அணையில் நான்காவது வால்வு திறக்கப்பட்டு, 10.1 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதன் காரணமாக, நீர் மட்டம் மெல்ல மெல்ல சரிந்து வருகிறது.
நேற்றைய தினம், 14 அடியாக குறைந்திருக்கிறது.தென்மேற்கு பருவ மழை, ஜூன் 1ல் துவங்கி விட்டதாக, வானிலை மையம் அறிவித்திருந்தாலும், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கன மழை பெய்யவில்லை.நேற்று முன்தினம், 25 மி.மீ., நேற்று, 12 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. இதன் காரணமாக, நீர் மட்டம் பெரிய அளவில் உயரவில்லை.மழைப்பொழிவு மற்றும் நீர் இருப்பை கணக்கிட்டு, தினமும் எடுக்கப்படும் அளவை, 7.5 கோடியாக குறைக்க, மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு குறித்து, வானிலை ஆராய்ச்சியாளர் சந்தோஷ் கிருஷ்ணன் கூறுகையில், ''கன மழை பெய்ய வாய்ப்பில்லை. அவ்வப்போது இடைவெளி விட்டு, மிதமான மழை பெய்யும். நாளை, நாளை மறுநாள் மழைப்பொழிவுக்கு வாய்ப்பிருக்கிறது. ஜூலை முதல் வாரம் எதிர்பார்க்கலாம். மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் பெய்யும் மழையால், சிறுவாணி அணை நீர் மட்டம் உயரும்,'' என்றார்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!