Load Image
dinamalar telegram
Advertisement

பணிக்கு வராமல் ஏமாற்றிய  ஏட்டு; சஸ்பெண்ட் செய்து அதிகாரி உத்தரவு

கோவை : கோவை அரசு மருத்துவமனை புறக்காவல் நிலைய பணிக்கு வராமல் ஏமாற்றிய, ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கோவை அரசு மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் செயல்படுகிறது. ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷன் கீழ் செயல்படும், இந்த புறக்காவல் நிலையத்தில் 24 மணி நேரமும் போலீசார் பணியில் இருப்பர்.குற்றச்சம்பவங்களில் காயம் பட்டு, அரசு மருத்துவமனைக்கு வருபவர் பற்றிய விவரங்களை சேகரித்து, சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டியது, இங்குள்ள போலீசாரின் முக்கிய பணி.இந்த பணியில் திங்கட்கிழமை இரவு பணியில் இருக்க வேண்டிய தலைமை காவலர் ஏழுமலை, பணி நேரத்தில் எந்த தகவலும் தெரிவிக்காமல் மாயமாகி விட்டார்.

அரசு மருத்துவமனைக்கு வந்த சிலர், புகார் தெரிவிக்க தலைமை காவலரை தேடியபோது, புறக்காவல் நிலையத்தில் யாரும் பணியில் இல்லாதது தெரியவந்தது.உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில், தலைமை காவலர் ஏழுமலை, குறிப்பிட்ட நேரத்தில் பணியில் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை சஸ்பெண்ட் செய்து, வடக்கு துணை கமிஷனர் மாதவன் உத்தரவிட்டார்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement