Load Image
dinamalar telegram
Advertisement

உரிமம் புதுப்பிக்கப்படாத ஆசிரம குழந்தைகள் இடமாற்றம்

மதுக்கரை : மதுக்கரையிலிருந்து சீரபாளையம் செல்லும் சாலையின் பிரிவு அருகே அன்னை நகரில், புற்றிடங்கொண்டீஸ்வரர் எனும் ஆசிரமம், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.

கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., துணை தலைவர் கிருஷ்ணசாமி ஆசிரமத்தின் தலைவராக பொறுப்பிலுள்ளார். 18 குழந்தைகள் இங்கு தங்கியிருந்தனர். அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன், 54 வார்டனாக உள்ளார்.கடந்த, 10 ஆண்டுகளாக செயல்படும் இந்த ஆசிரமத்தின் உரிமம், புதுப்பிக்கப்படாமல் உள்ளதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மதியழகன், பவித்ராதேவி ஆகியோர் நேற்று ஆசிரமத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.முறையான ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது. அங்கிருந்த, 18 குழந்தைகளும் மாநகரிலுள்ள சத்குரு சேவா ஆகிரமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மதுக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement