கழிவறையில் சிறுமி; மீட்டது சைல்டுலைன்
கோவை : கோவை ரயில்வே ஸ்டேஷன் கழிவறையில் தங்கியிருந்த சிறுமியை மீட்ட போலீசார், சைல்டுலைன் ஊழியர்களிடம் ஒப்படைத்தனர்.
கோவை ரயில்வே ஸ்டேஷன் கழிவறையில், 17 வயது சிறுமி ஒருவர் தங்கி இருப்பதை போலீசார் நேற்று பார்த்தனர். அவரிடம் விசாரித்தபோது, ஆந்திராவில் இருந்து வேலை தேடி வந்ததாகவும், கோவை ரயில்வே ஸ்டேஷன் வந்ததும், தன்னை அழைத்து வந்த நபர், தனியாக விட்டுச்சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.தனக்கு பெற்றோர் யாரும் இல்லை என்றும், இரண்டு நாட்களாக சாப்பிடவில்லை என்றும் தெரிவித்தார்.இதையடுத்து சிறுமி பற்றிய விவரம், சைல்டுலைன் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த சைல்டு லைன் ஊழியர்கள் சிறுமியை மீட்டு, கோவை உக்கடம் டான் பாஸ்கோ அன்பு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!