Load Image
dinamalar telegram
Advertisement

ஆலமரத்தை வெட்டி அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு

Tamil News
ADVERTISEMENT

விருத்தாசலம் : விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலை விரவாக்க பணிக்காக ஆலமரத்தை வெட்டி அகற்ற முயன்ற நெடுஞ்சாலை துறையினரை, பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையில் பஸ், லாரி, வேன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள், சென்னை, திருவண்ணாமலை, வேலுார், விழுப்புரம், ஒசூர், பெங்களூரு, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களுக்கு தினசரி சென்று வருகின்றன.



இந்நிலையில், 22 கி.மீ., துாரம் உள்ள இந்த சாலை, ரூ.136 கோடி மதிப்பில், சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட சாலை திட்டத்தில், விரிக்கப் பணி நடக்கிறது.விருத்தாசலம் பாலக்கரையில் இருந்து உளுந்துார்பேட்டை வரை சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்த பணிகள் வரும் டிசம்பரில் முடிய உள்ளது. இதற்காக சாலையோரம் உள்ள இலும்பை, வேம்பு, அரச மரம், ஆலரங்களை நெடுஞ்சாலை துறையினர் அகற்றி வருகின்றனர்.



இந்நிலையில், ஜங்ஷன் சாலையில் உள்ள ஆலமரத்தை நேற்று அகற்ற முயன்றனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, பணியை தடுத்து நிறுத்தினர்.தகலவறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, இது குறித்து ஆர்.டி.ஓ., விடம் மனு கொடுக்குமாறு அறிவுறுத்தினர்.அதைத்தொடர்ந்து ஆர்.டி.ஓ., ராம்குமாரிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆர்.டி.ஓ., உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement