வரி செலுத்தாத டாப் 50 பேர் இலக்கு! சீல் நடவடிக்கை தவிர்க்க அறிவுரை
கோவை : மாநகராட்சியில் ஜூலை 1 முதல் புதிய சொத்து வரி உயர்வு அமலுக்கு வரும் நிலையில் முதற்கட்டமாக வரி செலுத்தாத 'டாப் 50' பேருக்கு, நோட்டீஸ் வழங்கி சொத்துக்களுக்கு 'சீல்' வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சியில், 100 வார்டுகளிலும் இதுவரை, லட்சக்கணக்கில் வரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளவர்கள் பலர் உள்ளனர்.ஒவ்வொரு வார்டிலும் நீண்டகாலம் வரி செலுத்தாத, அதிகம் நிலுவை வைத்துள்ளவர்கள் என முதற்கட்டமாக, 'டாப் 50' பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறியதாவது:சொத்துவரி உயர்வு ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படவுள்ளது. தற்போது, 5.28 லட்சம் வரிவிதிப்பு தாரர்கள் உள்ளனர்.
இவர்களின் வரி விபரங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன.இன்னும் சுமார், 10 ஆயிரம் வரி விதிப்புதாரர்கள் கூடுதலாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வரி விதிப்புதாரர்களுக்கு வழங்க பழைய வரி, புதிய வரி என நோட்டீஸ் அச்சிடப்பட்டு வருகிறது. சிலர் வீட்டில் கடை நடத்தி வருவார்கள்; அங்கு வரி மாறுபடும். இது போன்ற இடங்களை கண்டறிந்து, வரி உயர்வு அமலுக்கு பின்பு வசூலிக்கவுள்ளோம்.
நீண்டகாலமாக வரி செலுத்தாதவர்கள் என, ஒவ்வொரு வார்டிலும் முதற்கட்டமாக 'டாப்' 50 பேர் தேர்வு செய்யப்பட்டு, மூன்று முறை நோட்டீஸ் அனுப்பப்படும்.அதன்பிறகும், செலுத்தாதவர்களின் சொத்துக்களுக்கு, 'சீல்' வைக்கப்படும். வரி உயர்வுக்கு பின் கூடுதலாக, 200 முதல், 350 கோடி ரூபாய் வரை வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரி செலுத்தாதவர்கள் தாமாகவே முன்வந்து செலுத்தி, நடவடிக்கைகளை தவிர்க்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!