விரிவாகிறது சுண்டப்பாளையம் ரோடு; ரூ.6.50 கோடியில் நெடுஞ்சாலைத்துறை விறுவிறு
கோவை : லாலி ரோட்டில் இருந்து பூசாரிபாளையம் வழியாக தொண்டாமுத்துார் செல்லும் சுண்டப்பாளையம் ரோடு, ரூ.6.50 கோடியில் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
கோவை மாநகராட்சி எல்லைக்குள், 2,837.68 கி.மீ., துாரமுள்ள சாலைகள் இருக்கின்றன. இதில், 2,618.08 கி.மீ., நீளமுள்ள சாலைகளை, மாநகராட்சி பராமரிக்கிறது. 219.60 கி.மீ., சாலையை, நெடுஞ்சாலைத்துறை பராமரிக்கிறது.இவற்றில், 456 சாலைகளை புதுப்பிக்க, ரூ.196 கோடி கேட்டு, தமிழக அரசுக்கு திட்ட அறிக்கை சமர்ப்பித்துள்ள மாநகராட்சி, நிதியை எதிர்பார்த்திருக்கிறது.
இருந்தாலும், தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தில், அவ்வப்போது ஒதுக்கப்படும் நிதியை கொண்டு, ஆங்காங்கே ரோடுகள் புதுப்பிக்கப்படுகின்றன. குண்டும் குழியுமாக இருக்கும் பகுதிகளில், பேட்ச் ஒர்க் செய்யப்படுகின்றன.
இச்சூழலில், ரூ.113 கோடியில், 32 கி.மீ., துாரத்துக்கு ரோடு விரிவாக்கம் செய்யும் பணியை, கடந்த, 4ம் தேதி துவக்கப்பட்டது. லாலி ரோட்டில் இருந்து பூசாரிபாளையம் வழியாக, தொண்டாமுத்துார் செல்லும் வழித்தடத்தில் சுண்டப்பாளையம் ரோட்டில், நரசாம்பதி குளம் - கிருஷ்ணாம்பதி குளம் சந்திக்கும் பகுதி வரை, 3 கி.மீ., துாரத்துக்கு ரூ.6.5 கோடியில் சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. 7 மீட்டர் அகலமுள்ள இந்த ரோடு, 10 மீட்டராக அகலப்படுத்தப்படுகிறது.
நெடுஞ்சாலைத்துறையினரால் நில அளவீடு செய்யப்பட்டு எல்லைக்கற்கள் நடப்பட்டுள்ளன. வேளாண் பல்கலை தோட்டமாக பயன்படுத்திய இடத்தில் பள்ளமாக இருப்பதால், கான்கிரீட் சுவர் கட்டி, மணல் கொட்டி மேடாக்கப்படுகிறது.நரசாம்பதி குளக்கரை திருப்பத்தில், 10 மீட்டர் அகலத்துக்கு சாலை விரிவாக்கம் செய்ய, கான்கிரீட் தடுப்பு சுவர் கட்ட வேண்டியுள்ளது. இதற்கு, மாநகராட்சியிடம் தடையின்மை சான்று கோரப்பட்டுள்ளது. இவ்விரு துறை அதிகாரிகளும் கள ஆய்வு செய்து, குளக்கரையின் எல்லையை அளவீடு செய்து கொடுத்திருக்கின்றனர்.
மாநில நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், 'லாலி ரோட்டில் இருந்து கரும்பு இனப்பெருக்க மையம் வரை, 3 கி.மீ., துாரத்துக்கு சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. நரசாம்பதி குளத்தில் தண்ணீர் தேக்கும் போது, ரோட்டை அரித்து விடக்கூடாது என்பதற்காக, கான்கிரீட் தடுப்பு அமைக்க இருக்கிறோம்' என்றனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!