அங்காளம்மன் கோவில் விழா ஆலோசனைக் கூட்டம்
விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை விழாவிற்கு பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, கலெக்டர் மோகன் தலைமை தாங்கி பேசியதாவது;அங்காளம்மன் கோவிலில் 28ம் தேதி அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு குடிநீர் வசதிகள், தற்காலிக கழிவறைகள் ஏற்படுத்தி தர வேண்டும்.
கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு, கோவில் அலுவலகம் மற்றும் புறக்காவல் நிலையங்களில் கண்காணிக்க வேண்டும்.உணவு கட்டுப்பாட்டுத்துறை மூலம் கோவில் வளாகத்தில் செயல்பட்டு வரும் கடைகளில் உள்ள பொருட்களின் காலாவதி தேதியை கண்டறிந்து அகற்ற வேண்டும். தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார்.அப்போது, எஸ்.பி., ஸ்ரீநாதா, டி.ஆர்.ஓ., ராஜசேகரன், திண்டிவனம் சப் கலெக்டர் அமித் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!