இணைய வழி பதிவு செய்த விவசாயிகளுக்கே பலன்கள்
கோவை ; இணைய வழியில் பதிவு செய்த விவசாயிகளுக்கே அனைத்து திட்டப்பலன்களும் வழங்கப்படும் என, தோட்டக்கலை துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தோட்டக்கலைத் துறை மூலம், விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டங்களில் விவசாயிகளுக்கு மானியங்களும் வழங்கப்படுகின்றன. வரும், 2022-23ம் நிதியாண்டில் விவசாயிகளுக்கு வழங்கப்படும், அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த, துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்நிலையில், அனைத்து பயன்களையும் பெற விவசாயிகள் இணைய வழியில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் புவனேஸ்வரி கூறுகையில், ''இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே, அனைத்து பலன்களும் வழங்கப்படும். இதற்காக விவசாயிகள், http://tnhorticulture.th.gov.in/tnhotrnet/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.பதிவு செய்யத் தெரியாத, இயலாத விவசாயிகள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள, தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்,'' என்றார்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!