Load Image
dinamalar telegram
Advertisement

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இடைத்தரகர்கள்... ஆதிக்கம்; கலெக்டர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை வாங்கி அவர்கள் பெயரிலேயே ஆன்லைனில் பதிவு செய்து விற்பனை செய்யும் இடைத் தரகர்களால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.திருவெண்ணெய்நல்லுார் தாலுகாவிற்குட்பட்ட மணக்குப்பம், சித்தலிங்கமடம், டி.புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிகமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டது.


திருவெண்ணெய்நல்லுார் மற்றும் அதன்சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் பல்வேறு விவசாய பொருட்களை விளைவித்தாலும் நெல்லை அதிக முக்கியத்துவம் அளித்து பயிர் செய்து வருகின்றனர்.வருடத்தில் நவரை பட்டம், சித்திரை பட்டம், சம்பா என பருவ நிலைக்கு ஏற்றாற்போல் 3 போகம் பயிர் செய்து வருகின்றனர். விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த விளை பொருட்களை அறுவடை செய்து அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், அரசு விதை பண்ணைகளுக்கும், நெல் மூட்டைகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.பெரும்பாலான விவசாயிகள் தங்கள் பகுதிகளுக்கு அருகே உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையதில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து குறிப்பிட்ட தேதிக்குள் நெல்களை கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.இதில் கடந்த சில காலமாக இடைத்தரர்கள் கிராமம் கிராமமாகச் சென்று விவசாயிகளிடம் பேசி அவர்களிடம் சொற்ப பணம் கொடுத்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து, விவசாயிகளின் பெயரில் ஆன்லைனில் பதிவு செய்கின்றனர்,



அதிகப்படியான நெல் மூட்டைகளை நேரடி கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் பெயரிலேயே கொண்டு வந்து விற்பனை செய்து வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இடைத்தரகர்கள் குறைந்த தொகைக்கு நெல்லை கொள்முதல் செய்வதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.மேலும் நேரடியாக நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல்லை கொண்டு செல்லும் விசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுகின்றனர்.எனவே, கலெக்டர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பாதுகாக்க தனி குழு அமைத்து விவசாயிகள் நெல் மூட்டைகளை சிரமமின்றி விற்பனை செய்ய வழிவகை செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement