மனுநீதி நாள் முகாம் நலத்திட்ட உதவிகள்
புவனகிரி : சாத்தப்பாடியில் நடந்த மனு நீதிநாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை டி.ஆர்.ஓ., வழங்கினார்.புவனகிரி, சாத்தப்பாடியில் நடந்த முகாமில் தாசில்தார் ரம்யா வரவேற்றார். தனி தாசில்தார் அன்பழகன், வட்ட வழங்கல் அலுவலர் இளவரசி, ஊராட்சி தலைவர் குமரவேல் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் வரவேற்றார்.
டி.ஆர்.ஓ., கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 166 பயனாளிகளுக்கு ரூ. 4 லட்சத்து 72 ஆயிரத்து 503 செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் தனி தாசில்தார் சித்ரா, மண்டல துணை தாசில்தார் பிரகாஷ், ரத்தினகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வருவாய் ஆய்வாளர் கவிதா நன்றி கூறினார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!