Load Image
dinamalar telegram
Advertisement

மராத்தான் போட்டி வரும் 26ல் நடக்கிறது

கோவை : நீலாம்பூர், டெக்கத்லான் மற்றும் ஜாஸ் பிட்னஸ் ஸ்டூடியோ இணைந்து நடத்தும், 'தமிழன் மராத்தான்' போட்டி வரும், 26ம் தேதியன்று டெக்கத்லான் வளாகத்தில் நடக்கவுள்ளது.

ஆண், பெண்களுக்கு 10கி.மீ., பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 5கி.மீ., சிறுவர்களுக்கான 3 கி.மீ., என, மூன்று பிரிவுகளில் போட்டி நடக்கிறது.போட்டியானது டெக்கத்லான் வளாகத்தில் துவக்கி, நீலாம்பூர், எல் அண்ட் டி பைபாஸ், ஆச்சான்குளம் வரை சென்று, மீண்டும் டெக்கத்லானில் நிறைவடைகிறது.வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு ரொக்கப்பரிசு, சான்றிதழ், பதக்கங்கள் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்க விருப்பமுடைய வீரர்கள், வீராங்கனைகள், 86103 79592 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement