சி.கே., பள்ளி மாணவி மாவட்ட அளவில் சாதனை
கடலுார், : கடலுார் சி.கே., பள்ளியில் பிளஸ் 2 மாணவி தேஜேஸ்வாணி 594 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.கடலுார் சி.கே. பள்ளியில் பிளஸ் 2 மாணவி தேஜேஸ்வாணி 600க்கு 594 மதிப்பெண் பெற்று கடலுார் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அனைத்து பாடப் பிரிவுகளில் 24 மாணவ, மாணவிகள் நுாறு சதவீதம் மதிப்பெண் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.குறிப்பிட்ட பாடப் பிரிவில் 12 மாணவர்கள் 99 மதிப்பெண் பெற்றுள்ளனர். சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கிய மாணவ, மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கும் பள்ளி சார்பில், பள்ளி நிர்வாகி அமுதா, தலைமை ஆசிரியை திவ்யாமேரி ஆகியோர் பாராட்டுதெரிவித்தனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!