ADVERTISEMENT
விழுப்புரம் : கலை பண்பாட்டு துறை மூலம் பாராட்டு சான்று வழங்கும் நிகழ்ச்சி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.மாவட்ட அளவில் 17 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்டோருக்கு, மாநில அளவிலான கலைபோட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை சார்பில் நடத்த உத்தரவிடப்பட்டது. அதன் பேரில், கடந்த ஏப்., 23ம் தேதி விழுப்புரம் மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்தில், குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவியம் ஆகிய ஐந்து பிரிவுகளில் போட்டிகள் நடந்தது.இதில், 79 பேர் கலந்து கொண்டனர்.
போட்டிகளில் குரலிசையில் லட்சுமிபிரியா, ஜெயரமணன், மோனிகா ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பெற்றனர். பரதநாட்டியத்தில் கலைசெல்வி, துர்கா, சமிதா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்றனர்.கருவியிசையில் சுரேஷ், மோகன், பால்ராஜ் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். கிராமிய நடனம் பிரிவில் முத்துராமலிங்கம், திலோத்தம்மா, ஜனார்த்தன் அகியோர் முதல் மூன்று இடங்களை பெற்றனர்.
ஓவியத்தில் ஜெயனேஷ்வர் சஞ்சய், பாரதிராஜா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்றனர்.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்று மற்றும் ரொக்கபரிசுகளை கலெக்டர் மோகன் வழங்கினார். கலை பண்பாட்டு துறை மண்டல உதவி இயக்குநர் நீலமேகன், அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஈச்வரன்பட்டதிரி உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!