ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள்
கோவை : கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை, பீளமேடு 'டாஸ்மாக்' மண்டல அலுவலகம் முன், நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர், கோரிக்கை பதாகைகளை கையில் ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில், டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தரபடுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், டாஸ்மாக் நிர்வாகத்தில் ஆளுங்கட்சி மற்றும் ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தின் தலையீட்டை தடுத்து நிறுத்த வேண்டும், தொழிற்சங்க ஊழியர்களை பழிவாங்கும் பணியிட மாற்றங்களை திரும்ப பெற வேண்டும், டாஸ்மாக் நிர்வாக சீர்கேடுகளை களைந்திட நிர்வாக அமைப்பு குழு அமைக்க வேண்டும் உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!