Load Image
dinamalar telegram
Advertisement

கலெக்டர் பெயரில் போலி கணக்கு: சிக்குகிறார் மகாராஷ்டிர மாநில நபர்

கோவை : கோவை கலெக்டரின் பெயரில் போலி வாட்ஸ்அப் கணக்கு தொடங்கி பண மோசடி செய்ய முயற்சித்தவர், மகாராஷ்டிராவை சேர்ந்தவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை கலெக்டர் சமீரன் பெயர் மற்றும் படத்துடன் கூடிய, வாட்ஸ்அப் கணக்கில் இருந்து பலருக்கு, மெசேஜ் வந்தது. அமேசான் கிப்ட் கூப்பன் வாங்கி அனுப்பும்படி, வந்த அந்த மெசேஜ் பலருக்கும் சந்தேகம் ஏற்படுத்தியது.கலெக்டருக்கு தகவல் தெரிவித்தனர். உஷாரான கலெக்டர், உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்தார். 'மோசடி பேர்வழிகள், தன் பெயர், படத்தை தவறாக பயன்படுத்தியுள்ளனர். யாரும் ஏமாந்து விட வேண்டாம்' என்றும் எச்சரித்தார்.

இதற்கிடையே, சைபர் கிரைம் போலீசார் விசாரணையில், குறிப்பிட்ட அந்த மொபைல் எண், மகாராஷ்டிரா மாநில முகவரியில் பதிவு செய்யப்பட்டது என்று தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட மொபைல் எண், ஏற்கனவே நடந்த மோசடிகளில் தொடர்புடையது என்பதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் பெயரை துணிகரமாக பயன்படுத்தி, மோசடியில் ஈடுபட்டுள்ள அந்த நபரை பிடிக்க, கோவை சைபர் கிரைம் போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement