Load Image
dinamalar telegram
Advertisement

அம்மா உணவக உணவு தரம்; மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

கோவை : தெற்கு மண்டலத்தில் உள்ள அம்மா உணவகத்தில் சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா என, மாநகராட்சி கமிஷனர் நேற்று ஆய்வு செய்தார்.

மாநகராட்சி தெற்கு மண்டலம், சுந்தராபுரத்தில் துாய்மைப் பணியாளர்களின் வருகைப்பதிவேடுகளை ஆய்வு செய்து, குப்பை சேகரிக்கும் முறை குறித்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் அறிவுரைகள் வழங்கினார். போத்தனுார் பஞ்சாயத்து அலுவலக வீதியில் தண்ணீர் அழுத்தம், தரம் குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார்.100வது வார்டு அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவு, சுகாதாரமான முறையில் தரமாக வழங்கப்படுகிறதா என்பதையும், உணவுப்பொருட்கள் இருப்பு குறித்த பதிவேடுகளையும் ஆய்வுசெய்தார்.

கணேசபுரம் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் தேங்கியுள்ள குப்பை, செடி கொடிகளை துார்வார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.பின்னர், உக்கடம் கழிவுநீர் பண்ணையில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்தார். தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement