Load Image
dinamalar telegram
Advertisement

எமிஸ் இணையதளத்தில் திடீர் கோளாறு! அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அவதியோ அவதி

கோவை : எமிஸ் இணைய தளத்திற்கான சாப்ட்வேர், டேட்டாபேஸ், சர்வர் போன்ற தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்த வேண்டும் என, பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

பள்ளிக் கல்வித்துறையின் கீழ் ஒருங்கிணைந்த மேலாண்மை தகவல் அமைப்பு(எமிஸ்.,) இணையதளம் செயல்பாட்டில் உள்ளது. மாணவர்களின் விபரங்கள், மதிப்பெண் ஆசிரியர்கள் வருகை, பள்ளிகளின் செயல்பாடுகள், ஊதியம், இடைநின்ற மாணவர்கள், தேர்வு சார்ந்த விபரங்கள், என பல்வேறு தகவல்கள் இதில் தொடர்ந்து அப்டேட் செய்யப்படும்.இப்பணிகள் யாவும் அந்தந்த பள்ளிகளிலேயே பதிவேற்றம் செய்யப்படுகிறது.

தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்களின் விபரங்கள் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடக்கிறது.இந்நிலையில், எமிஸ் தளத்தில் நேற்று முன் தினம் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, மாணவர்களின் தகவல்கள் மாயமானதோடு, மாற்றுச்சான்றிதழ் வழங்குதல், வருகை பதிவு, உள்ளிட்ட பணிகளை முடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக, ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, கோவை அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:பள்ளிகள் திறந்து 10 நாட்கள் ஆகி விட்டநிலையில், எமிஸ் தளம் கோளாறு காரணமாக மாணவர்களை அடுத்தடுத்த வகுப்புகளுக்கு மாற்றுவதே, பெரும் சிரமம் ஆகிவிட்டது.இந்தாண்டு ஐந்தாம் வகுப்புக்கு சென்ற மாணவர்கள், எமிஸ் தளத்தில் நான்காம் வகுப்பில் இருப்பதாகவே காட்டுகிறது. டி.சி.,கொடுக்கும் போது, எமிஸ் தளத்தில் சர்வர் மிகவும் மந்தமாக இருப்பதால், பணிகளை விரைந்து முடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

சமீபத்தில் நடந்த கூட்டத்தில் கூட, எமிஸ் தளம் வாயிலாக, ஆசிரியர்கள் தங்களது விடுமுறைகளை பதிவு செய்யவும், பெற்றோருக்கு குழந்தைகளின் விபரங்கள் குறித்து தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக தெரிவித்தனார்.எங்களை பொறுத்தவரை, எமிஸ் மிகவும் பயனுள்ளதுதான். அதேசமயம், எமிஸ் தளத்திற்கான சாப்ட்வேர், டேட்டாபேஸ், சர்வர் போன்ற தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தினால்தான் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement