Load Image
dinamalar telegram
Advertisement

நாய் உரிமையாளர் மீது போலீஸ் வழக்கு பதிவு


காரைக்கால், : சாலையில் நடந்து சென்றவரை நாய் கடித்ததால், நாய் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.காரைக்கால் கோட்டுச்சேரி வரிச்சிக்குடி தெற்கு தெருவை பகுதியை சேர்ந்த பாண்டியன் மகன் ஆதிசந்திரன், கடந்த 20ம் தேதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த வினோத் என்பவருடைய நாய் ஆதிசந்திரனை கடித்துள்ளது.

நாயை விரட்டியவரை, நாயின் உரிமையாளரான வினோத் ஆபாசமாக பேசி இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். காயம் அடைந்த ஆதிசந்திரனை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவரது தந்தை பாண்டியன் கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வினோத் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement