Load Image
dinamalar telegram
Advertisement

நம்ம ஊரு நம்ம ருசி சமையல் போட்டி சிதம்பரம், புதுச்சேரியில் ஏற்பாடு


புதுச்சேரி, : 'தி இந்து' ஆங்கில நாளிதழ் சார்பில், சமையல்கலை நிபுணர் தாமு தலைமையில், 'நம்ம ஊரு நம்ம ருசி' என்ற சமையல் போட்டி சிதம்பரத்தில் வரும் 25ம் தேதியும், புதுச்சேரியில் 26ம் தேதியும் நடக்கிறது.சிறந்த சமையல் கலைஞர்களைக் கண்டறியவும், தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் வசிக்கும் பொதுமக்களின் சமையல் கைப்பக்குவத்தை வெளியுலகிற்கு



தெரியப்படுத்தும் வகையிலும், 'தி இந்து' நாளிதழ் 'நம்ம ஊரு நம்ம ருசி' சமையல் போட்டிகளை நடத்தி வருகிறது. இதில் சிதம்பரம் மாவட்ட மக்கள் பங்கேற்கும் வகையில், வரும் 25ம் தேதி காலை 10 மணிக்கு, சாரதம் ஓட்டலில் சமையல் போட்டி நடக்கிறது.தொடர்ந்து, புதுச்சேரி மக்கள் பங்கேற்கும் வகையில், மறுநாள் 26ம் தேதி காலை 10 மணிக்கு, ஹோட்டல் அதிதி டி.ஜி.ஐ., கிராண்டில் சமையல் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.போட்டியாளர்கள் சைவம், அசைவம், காலை உணவுகள், தின்பண்டங்கள், இனிப்புகள் என எதை வேண்டுமானாலும் சமைக்கலாம்.


ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் இரண்டு உணவு வகைகள் சமைக்க வேண்டும். அதில், ஒரு உணவு, தமிழகத்தின் சமையல்கலையுடன் 'நம்ம ஊரு நம்ம சேவரிட் பாஸ்தா' உபயோகித்து தயாரித்து கொண்டு வர வேண்டும்.ஆர்.கே.ஜி. நெய், கார்டியா அட்வான்ஸ்டு நிலக்கடலை எண்ணெய், சேவரிட், மதுரம் அரிசி, எல்.ஜி. கூட்டுப்பெருங்காயம், நாகா உணவுப்பொருட்கள், எவரெஸ்ட் மசாலா ஆகியவற்றைப் பயன்படுத்தி உணவு தயாரிப்பவர்களுக்கு கூடுதல் புள்ளிகள் தரப்படும். ஒவ்வொரு நகரத்திலிருந்தும் 3 பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர்.போட்டிகளை, சமையல் கலை நிபுணர் தாமு தலைமையிலான நடுவர் குழுவினர் நடத்துகின்றனர்.


போட்டியில் பங்கேற்க bit.ly/ OSOT2022 அல்லது 99412 55695 என்ற எண்ணுக்கு பெயர் (ஸ்பேஸ்) மாநகரம் (ஸ்பேஸ்) டிஷ் பெயர் (ஸ்பேஸ்) என்ற வடிவத்தில் குறுந்தகவல் அல்லது வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பலாம் அல்லது இந்த எண்ணை தொடர்பும் கொள்ளலாம்.துவக்க போட்டிகள் தமிழகத்தின் 20 இடங்களில் நடத்தப்படுகிறது.இறுதிப் போட்டி ஜூலை 23ம் தேதி சென்னையில் நடக்க உள்ளது. வெற்றியாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், இரண்டாவது பரிசாக ரூ.60 ஆயிரம், மூன்றாவது பரிசாக ரூ.40 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement