பேனர் கிழித்த வாலிபர் மீது வழக்கு
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே பேனர் கிழித்த வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.உளுந்துார்பேட்டை தாலுகா எறையூர் பகுதியை சேர்ந்தவர் தேவசகாயம் 57. இவரது மகன் அந்தோணிசாமி , சாமியாராகி ஊருக்கு வருவதையொட்டி பேனர் வைத்திருந்தார்.
இந்த பேனரை முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த இருதயநாதன் மகன் ரோல்பிரான்சிஸ் 32, பேனரை கிழித்து சேதப்படுத்தியதோடு அவரை கழுத்தைப் பிடித்து தள்ளினார்.இது குறித்து தேவசகாயம் கொடுத்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் ரோல்பிரான்சிஸ் மீது வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!