மூன்றாம் டிவிஷன் கிரிக்கெட்; ஆறுமுகம் சி.சி., வெற்றி
கோவை : மாவட்ட அளவிலான மூன்றாவது டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், ஆறுமுகம் சி.சி., அணி, 120 ரன்கள் வித்தியாசத்தில், சூர்யபாலா கிரிக்கெட்டர்ஸ் அணியை வீழ்த்தியது.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 'என். தாமோதரன் வெல்பேர் டிரஸ்ட் கோப்பைக்கான' மூன்றாம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி, பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'ஏ' மைதானத்தில் நடந்தது. இதில், ஆறுமுகம் கிரிக்கெட் கிளப் அணியும், சூர்யபாலா கிரிக்கெட்டர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில், முதலில் பேட் செய்த ஆறுமுகம் அணி, 50 ஓவர்களில், ஒன்பது விக்கெட் இழப்பிற்கு, 183 ரன்கள் சேர்த்தது. ஆறுமுகம் அணிக்காக, இம்ரான் கான், 52 ரன்கள் சேர்த்தார்.
சூர்யபாலா அணியின், அருண் மூன்று விக்கெட் வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய சூர்யபாலா அணியினர், எதிரணி வீரர்கள் ஹரிகுமார் மற்றும் அருணின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து, 63 ரன்களுக்கு 'ஆல் அவுட்' ஆகினர். இதன் மூலம், 120 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுமுகம் அணி அபார வெற்றி பெற்றது.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!