Load Image
dinamalar telegram
Advertisement

அரசு பள்ளிகளில் இன்று மெகா ஆய்வு



மதுரை, -மதுரையில் அரசு பள்ளிகளில் கல்வி அதிகாரிகள் குழுக்கள் இன்று (ஜூன் 24) மெகா ஆய்வு மேற்கொள்ளவுள்ளன.கல்வித்துறை சார்பில் மாநில அளவில் 40 முதன்மை கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,), 100 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான (டி.இ.ஓ.,) திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் மதுரையில் நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக சி.இ.ஓ., டி.இ.ஓ.,க்கள் இன்று நான்கு பஸ்களில் குழுக்களாக பிரிந்து மதுரை நகர், திருமங்கலம், செக்கானுாரணி, உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அரசு, மாநகராட்சி, கள்ளர் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர். பள்ளி கட்டமைப்பு வசதி, ஆசிரியர் கற்பித்தல் திறன், கல்வி 'ஆப்'கள் பயன்பாடு, 'எமிஸ்' வழி வருகை பதிவேடுகள் குறித்து குழுக்கள் ஆய்வு செய்யும்.அதிகாரிகள் கூறுகையில், "இன்று 40க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முடிவு குறித்து குழுக்கள் சார்பில் அறிக்கை அளிக்கப்படும்," என்றனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement