Load Image
Advertisement

ராகுல் - பழனிசாமி ரகசிய ஒப்பந்தம்? தமிழக அரசியலில் பரபரப்பு

Tamil News
ADVERTISEMENT
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியுடன் பேசியதாக, வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை விவகாரத்திற்கு நீதிமன்றம் வாயிலாக பன்னீர்செல்வம் தற்காலிக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஒற்றை தலைமை தீர்மானத்தை பொதுக்குழுவில் நிறைவேற்ற முடியாமல் போனதை தனக்கு ஏற்பட்ட தோல்வியாக பழனிசாமி கருதுகிறார். பன்னீர்செல்வத்துக்கு பா.ஜ., மேலிடம் உதவுகிறதோ என்ற சந்தேகம், பழனிசாமி தரப்புக்கு ஏற்பட்டுள்ளது.


ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, பழங்குடியின வகுப்பை சேர்ந்த திரவுபதிமுர்முவை வேட்பாளராக அறிவித்துள்ளது. எதிர்க்கட்சிகள் முன்னாள் எம்.பி., யஸ்வந்த் சின்காவை வேட்பாளராக அறிவித்துள்ளன. சமூக நீதி பேசும் தி.மு.க., பழங்குடியின வேட்பாளரை ஆதரிக்குமா அல்லது உயர் வகுப்பு வேட்பாளரை ஆதரிக்குமா என, நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் என்ன முடிவெடுப்பது எனத் தெரியாமல் தி.மு.க., தவித்து வருகிறது.


பா.ஜ., வேட்பாளரை தி.மு.க., ஆதரித்தால் அ.தி.மு.க., பக்கம் செல்ல, காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியுடன் பேசியதாக, தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக இரு தரப்பிலும், அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
Latest Tamil News

அ.தி.மு.க.,வுக்கு கடந்த சட்டசபை தேர்தலில், தேர்தல் வியூகம் கொடுத்தவர் உதவியுடன், ராகுல் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளருக்கு, ராகுல் ஆதரவு கோரியதாகவும், பா.ஜ.,வை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. பா.ஜ., வேட்பாளரை ஆதரிக்காமல், பழனிசாமி எதிர்க்கட்சிகளின் வேட்பாளரை ஆதரிக்க முடிவு செய்தால், அரசியல் கூட்டணி மாறும்.


இதை உளவுத்துறை வழியே அறிந்த, பா.ஜ., தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. அதைத் தொடர்ந்து பா.ஜ., நிர்வாகிகள், நேற்று பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டனர். பழனிசாமி என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பதே, தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.



- நமது நிருபர் -


வாசகர் கருத்து (26)

  • Barakat Ali - Medan,இந்தோனேசியா

    ரெண்டு பூனைகள், ஒரு குரங்கு, ஒரே அப்பம் கதைதான் பொதுவா நமக்கு தெரியும் ........ ஆனா கதை இப்போ ரெண்டு பூனைகள், ரெண்டு குரங்குகள் என்று போகிறதே ????

  • raja - Cotonou,பெனின்

    இது உண்மையானால் எம் ஜி ஆர் தொண்டர்கள் எடப்பாடியாரை எதிர்ப்பார்கள்....

  • chinnakaruppan - natham,இந்தியா

    காங்கிரஸ் போல் ஆக போகும் கட்சி அதனுடன் தான் சேர வேண்டும்.

  • SKANDH - Chennai,இந்தியா

    திமுகவோடு சேர்ந்து பிஜேபி யையும் ஒழிக்க வேண்டும். பிஜேபி நாட்டுக்கு கெடுதி.

  • duruvasar - indraprastham,இந்தியா

    இது உண்மையானால் கல்வி தந்தை பீட்டர் அல்போன்ஸ், அழகிரி இருவரும் திமுகவிலிருந்து விலகுவார்களா? அதேபோல் பெண்ணுரிமை இயக்கத்திற்க்கும் கனிமொழி ஜோதிமணி என்ற இரட்டை தலைமை போய் ஜோதிமணி என்ற ஒற்றை தலமையாக மாறுமாஇ ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்

/
volume_up